நடிகர் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜராஜ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன், கலாபவன்மணி, மணிவண்ணன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். 2013ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த போதிலும் இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு இருந்த பைனான்ஸ் பிரச்சினை, விஷாலுக்கு இருந்த பிரச்சினைகள் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. இப்படத்தில் நடித்திருந்த கலாபவன்மணி, மணிவண்ணன் ஆகியோர் இயற்கை எய்திவிட்டனர்.
இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதகஜராஜா திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என்று நடிகர் சந்தானம், மற்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு அறிவித்துள்ளனர்.
முன்னதாக பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் தள்ளிபோயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி – ரகுபதி காட்டம்!