ADVERTISEMENT

எளிய முறையில் நடந்த விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்… திருமணம் எப்போது?

Published On:

| By christopher

vishal dhanshika engagement happens on his bday

சென்னையில் நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம்நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிய முறையில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு அங்கு தான் என்னுடைய திருமணம் நடைபெறும் என ந்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஏற்கெனவே உறுதியாக கூறியிருந்தார்.
மேலும் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில், நடிகை சாய் தன்ஷிகாவை, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். அப்போது என் பிறந்த நாளை ஆகஸ்ட் 29அன்று உங்களுக்கு நல்ல செய்தியை சொல்வேன் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி விஷாலின் பிறந்தநாளை ஒட்டி, இன்று அவருக்கும் – தன்ஷிகாவுக்கும் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்தத்தில் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய ஸ்பெசலான இந்த பிறந்தநாளுக்கு இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வாழ்த்து தெரிவித்து ஆசிர்வதித்ததற்காக அனைவருக்கும் நன்றி. இன்று எனது நிச்சயதார்த்தம் சாய் தன்ஷிகாவுடன் நடைபெற்றது. எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்ல எண்ணங்களையும் எதிர்பார்க்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
அதே போன்று, “அவருடைய பிறந்தநாள்ல, இந்த நிச்சயதார்த்தம் நடந்தது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எல்லாருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்” என சாய் தன்ஷிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்க மேலும் இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், அதன்பிறகே அவரது திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share