ஐபிஎல் தொடரில் 17 ஆண்டுகளாக விளையாடி வரும் ஆர்சிபி அணியால், ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
கடந்த சீசனில் முதலில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அடுத்தடுத்து அபாரமாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. தற்போது, அந்த அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்கும் டூ பிளசிஸ் 40 வயதை எட்டி இருப்பதால், புதிய கேப்டனை தேடுவதும் அவசியமாகியுள்ளது.
எனினும், புதிய கேப்டனை கொண்டு வரப்படுவதை விடவும், விராட் கோலியை சமாதானம் செய்து கேப்டனாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, 140 போட்டிகளில் பணியாற்றியுள்ளார். ஆனால், ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாததால், கடும் மன அழுத்தம் ஏற்பட்டது.
சோசியல் மீடியாவில் செய்யப்பட்ட கேலி, கிண்டல் காரணமாக அழுத்தத்தை குறைக்க அவர் பதவியில் இருந்து விலகினார். இருந்தாலும் கடந்த சீசனில் டூ பிளசிஸ்-க்கு காய்ச்சல் ஏற்பட்ட போது 2 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.
விராட் கோலிக்கு 35 வயதாவதால் இளம் வீரர் ஒருவரை கேப்டனாக கொண்டு வந்தால், அவரை கையாள்வது கடினமாக இருக்கும். இதனால் விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஏற்கும்படி அந்த அணியின் உரிமையாளர்கள் , பயிற்சியாளர் ஆண்டி பிளவர்,பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனையை விராட் கோலியும் ஏற்றுள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆர்சிபி அணி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இன்ஸ்டா பக்கத்தில் கடைசி சமந்தா படத்தையும் நீக்கிய நாகசைதன்யா
தேவரை போற்றக்கூடிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்: ஸ்டாலின் பேட்டி!