இங்கிலாந்திற்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் தொடர்களிலும், கோலி விளையாட வாய்ப்புகள் இல்லையென தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. kohli opted out of eng tests
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதனால் அடுத்து வரும் போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் காயம் காரணமாக ஜடேஜா, கே.எல்.ராகுல் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என கோலி அறிவித்திருந்த நிலையில். அடுத்தடுத்து இருவரும் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இருந்தே மொத்தமாக கோலி விலகலாம் என, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோலியின் அம்மா சரோஜ் கோலி தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாராம். கல்லீரல் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவரின் உடல்நிலை சற்று மோசமாக இருக்கிறதாம்.
இதனால் தான் கிரிக்கெட்டை அதிகம் விரும்பும் கோலி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அம்மாவின் உடல்நிலை காரணமாக, அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாடுவது கடினம் என கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்துவது போல அணிக்கு திரும்புவது குறித்து இதுவரை கோலி தகவல் தெரிவிக்கவில்லை என, பிசிசிஐ தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
வழக்கமான வதந்தி என இதை நாம் ஓரங்கட்டவும் முடியாது. ஏனெனில் கிரிக்கெட் தான் உலகம் என வாழ்ந்து வரும் கோலி, இதுபோன்ற முக்கியமான தருணங்களில் அணிக்கு விளையாடாமல் இருப்பதை விரும்ப மாட்டார்.
என்றாலும் எல்லாம் சரியாகி கோலி விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆசையாக இருக்கிறது. கோலி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? இல்லையா? என்பதை பிசிசிஐ ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோனியை விட அதிகமாக ஐபிஎல் டைட்டிலை வென்ற வீரர்கள்
சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா?
kohli opted out of eng tests