INDvsPAK : ஒரேநாளில் விராட் கோலி படைத்த சாதனைகள்… முழுப் பட்டியல்!

Published On:

| By christopher

virat kohli huge record in icc odi

champions trophy : சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற காரணமாக இருந்த விராட்கோலி ஒரே நாளில் பல்வேறு அபார சாதனைகளை படைத்துள்ளார். virat kohli huge record in icc odi

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரம வைரியான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட்கோலி 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியின் மூலம் விராட்கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

சாதனை பட்டியல்! virat kohli huge record in icc odi

🛑ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 287 இன்னிங்ஸ்களில் 14,000 ரன்கள் எடுத்ததன் மூலம் விராட் கோலி அதிவேகமாக 14,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையைப் படைத்தார். இலங்கையின் குமார் சங்கக்காரா (14,234) 378 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த நிலையில் 300 இன்னிங்ஸ்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

🛑இந்தப் போட்டியின் போது கோலி தனது 51வது ஒருநாள் சதத்தையும் அடித்தார். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம், ஐசிசி போட்டிகளில் அதிக 50+ ஸ்கோர்கள் (23) அடித்த டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்தார்.

🛑மேலும் நேற்று போட்டியில் இரண்டு கேட்சுகளை பிடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகளை எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனை (156) சாதனையை கோலி (158) முறியடித்தார்.

🛑விராட்கோலி முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

🛑சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.

🛑ஐசிசி ஒரு நாள் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share