ரசிகர்களுக்கு விராட் கோலி அட்வைஸ்!

Published On:

| By Minnambalam

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினாலும், சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி சதம் அடித்தார்.

இரண்டு வருடங்களாக சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி அந்த ஆட்டத்தில் சதம் அடித்தது இந்திய அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

ADVERTISEMENT

விராட்கோலி சதமடித்ததை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அது மட்டுமின்றி பாகிஸ்தான் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரார்களும் விராட் கோலியின் சதத்தை பாரட்டி தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர். இது பெரும் வைரலானது.

ADVERTISEMENT
Virat Kohli advice to fans

இந்நிலையில், விராட்கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சிறுவயதில் விராட்கோலி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் உணவு உண்ணும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ” உண்ணுங்கள் , பருகுங்கள் , உங்கள் நண்பர்கள் மனதை புண்படுத்தாதீர்கள்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் விராட் கோலி. கிரிக்கெட் வீரர்களிலே இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்கள் வைத்திருப்பவர் விராட்கோலிதான்.

இதனால், அவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கான லைக்குகள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி : பாராட்டி தள்ளிய ரோகித் சர்மா

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share