நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்து பாலத்தில் இருந்து கீழே வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர் அஜாக்கிரதையாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கோபமான பொதுமக்கள் இளைஞர்களின் பைக்குகளை 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசினர்.
இதை அடுத்து, ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினர். தற்போது இந்த வீடி யோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி டிப்ஸ்: மரு உதிர முடி கட்டுவது பயனளிக்குமா?
டாப் 10 நியூஸ் : பொன்முடி வழக்கு விசாரணை முதல் வேட்டையன் அப்டேட் வரை!
கிச்சன் கீர்த்தனா : ஹெல்த்தி உருண்டை
மது விற்பனை லாபத்தை பெருக்க தீவிரம் காட்டுகிறார்கள் : திருமாவளவன் பேச்சு!