ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிகையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார்.
நட்சத்திர வேட்பாளராக அறியப்பட்ட அவருக்கு எதிராக பாஜக சார்பில் யோகேஷ் குமார் பைராகி, ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் அமர்ஜித் தண்டா, ஆம் ஆத்மி கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை கவிதா தலால் மற்றும் இந்திய தேசிய லோக் தள் சார்பில் சுரேந்தர் லேதர் ஆகியோர் போட்டியிட்டனர்.
எனினும் தேர்தல் களத்தில் வினேஷ் போகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே வினேஷ் போகத் முன்னிலை வகித்தார்.
இதனால் அவரது வெற்றியின் மூலமாக கடந்த 19 ஆண்டுகளாக தோல்வியை தழுவி வரும் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் சில மணி நேரங்களில் வினேஷ் போகத்தை விட அதிகபடியான வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் யோகேஷ் முன்னேறி வருகிறார்.
காலை 10.45 மணி நிலவப்படி, அவர் 2039 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் ஜுலானா தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக பாஜகவே வெற்றி பெற்றுவிடுமோ என்ற அச்சம் காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹரியானா : மாறும் காட்சிகள்… வேகமாக முன்னேறும் பாஜக… சோகத்தில் காங்கிரஸ்!
வினேஷ் போகத் முன்னிலை… 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலானா தொகுதியை கைப்பற்றும் காங்கிரஸ்?
ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை : ஓங்கும் காங்கிரஸ்!
10 கோடி பார்வைகளை கடந்த ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்!