பாரிஸ் மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது, இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. வினேஷ் போகத்துக்கு கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். அதோடு, இந்தியா முழுவதும் பிரலமான விளையாட்டு வீராங்கனையவும் வினேஷ் போகத் மாறி விட்டார். பதக்கம் வென்றிருந்தால் கூட, இந்தளவுக்கு பிரபலமாகியிருப்பாரா என்று தெரியவில்லை.
இப்போது, இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தபடியாக பிரபல விளையாட்டு வீராங்கனையாக வினேஷ் போகத் மாறியுள்ளார். தற்போது, ஹரியானாவில் ஓய்வில் இருக்கும் வினேஷ் போகத்தை விளம்பரத்துக்கு ஒப்பந்தம் செய்ய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், தனது ஒப்பந்த தொகையையும் வினேஷ் போகத் உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக வினேஷ் போகத் விளம்பரங்களில் நடிக்க 25 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, தனது சம்பளத்தை ஒரு கோடி வரை உயர்த்தியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதே போல துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக மனு பாக்கரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக 25 லட்சம் விளம்பரத்துக்கு சம்பளமாக வாங்கி கொண்டிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றதையடுத்து, அவரின் மவுசு அதிகாரித்துள்ளது. இதனால், அவரும் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தற்போது, மனு பாக்கார் தம்ஸ்அப் நிறுவனத்துடன் 1.5 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதேபோல, ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மவுசு அதிகரித்துள்ளதால், அவரும் விளம்பரத்துக்கான ஒப்பந்த தொகையை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வாகை மலருக்கு இத்தனை சிறப்புகளா! : எப்படி யோசித்தார் நடிகர் விஜய்?
இந்தியாவுக்கு எதிராக 10 ஆண்டுகள் தொடர் தோல்வி… ஸ்டீவ் ஸ்மித் சொல்வது என்ன?