பல்வேறு நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி!

Published On:

| By Prakash

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலத்திற்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் அனுமதி அளிக்கும்படி

ADVERTISEMENT

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி முரளி சங்கர் முன்பு நேற்று மாலை வரை நடைபெற்றது. அதன் உத்தரவு விவரங்கள் இன்று (ஆகஸ்ட் 31) காலை வெளியானது.

ADVERTISEMENT

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலத்திற்கும் அனுமதி அளித்துள்ள நீதிபதி, பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தார்.

“ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது.

ADVERTISEMENT

அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதி குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது.

எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.

ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா மதுபானங்கள் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளக்கூடாது” எனப் பல நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

விநாயகர் சதுர்த்தி : தலைவர்கள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel