விழுப்புரம் சண்முகம் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவடைந்துள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்தில் காலை முதல் சோதனை நடத்தி வந்த அதிகாரிகள் இரவு 8.30 மணியளவில் அவரை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில் விழுப்புரம் சண்முகம் காலனியில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை இரவு 10.45 மணியளவில் நிறைவடைந்துள்ளது. சோதனையை முடித்துக்கொண்டு நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையில் நிலப்பத்திரங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு!
