ADVERTISEMENT

பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கோவிலுக்கு சீல்!

Published On:

| By Monisha

draupadi amman temple sealed

பட்டியலின மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டதால் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு இன்று (ஜூன் 7) சீல் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு பல வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது பட்டியலின மக்கள் சிலர் கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2 முறையும் வருவாய் கோட்டாட்சியர் 7 முறையும் என மொத்தம் 9 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT
villupuram draupadi amman temple sealed for not allowing dalits

இந்த நிலையில் இன்று காலை விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்தார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இதனையடுத்து மேல்பாதி கிராமத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் 2,000-க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மோனிஷா

WTC Final : ஆஸ்திரேலியாவை வெல்லத் துடிக்கும் இந்தியா… 3 முக்கிய காரணங்கள்!

உக்ரைன் அணையின் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளம் ஏற்படும் அபாயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share