விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு புதிய சுங்ககட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி வரை 74 கி.மீ துாரத்திற்கு நான்கு வழி சாலைகளை ’உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இச்சாலையில் வாகனங்கள் செல்ல, (National Highways Authority of India, NHAI) எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவுப்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள கட்டண விபரங்களை பார்ப்போம்,
கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு ஒரு வழி கட்டணமாக கடந்த ஆண்டு 100 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் இது தற்போது 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 105 ரூபாய் வசூல் செய்யப்பட இருக்கிறது.
அதேபோல் பல முறை பயணிக்க கடந்த ஆண்டில் 150 ரூபாய் வசூல் செய்யப்பட்ட சூழலில் இது 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதாந்திர கட்டணமாக 3,045 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் 45 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,090 ரூபாய் வசூல் செய்யப்பட இருக்கிறது.
இலகு ரக வாகனங்களை பொறுத்தவரை ஒரு வழி கட்டணம் 180 ரூபாய், பல முறை பயணிக்க 265 ரூபாயில் இருந்து 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 270 ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளது. அதேபோல் கடந்த வருடம் 5,330 ரூபாயாக இருந்த மாதாந்திர கட்டணம் 75 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 5,405 ரூபாய் வசூல் செய்யப்பட இருக்கிறது.
டிரக், பஸ் ஒருவழி கட்டணம் 360 பல முறை பயணிக்க 540 ரூபாய் மாதாந்திர கட்டணம் கடந்த வருடம் 10,665 வசூலிக்கப்பட்ட நிலையில், இது 150 ரூபாய் உயர்த்தப்பட்டு 10,815 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. பல அச்சு வாகனம் இரு அச்சுகளுக்கு மேல் ஒருவழி கட்டணம் 580 ரூபாய் , பல முறை பயணிக்க 870 ரூபாய் , மாதாந்திர கட்டணம் 17,380 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், பள்ளி பேருந்துகளுக்கு மாதாந்திர கட்டணமாக ரூபாய் 1000 வசூலிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
