விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 1992 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.
அதன்படி நாளை மறுதினம் (செப்டம்பர் 1) முதல் விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
நகாய் உத்தரவின் பேரில் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதே போன்று, மேட்டுப்பட்டி, வீரசோழபுரம் மற்றும் நத்தக்கரை (சேலம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) எலியார்பத்தி (மதுரை ) புதூர் பாண்டியாபுரம் (தூத்துக்குடி) மனவாசி, அரவக்குறிச்சி (கரூர்) ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.
