விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல் ஆளாக சென்று தனது சொந்த கிராமத்தில் வாக்களித்தார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரத்தில் உள்ள தனது கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
காலை முதல் மக்கள் அதிகளவில் சென்று வாக்களித்து வருகின்றனர். கானை ஒன்றியத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், ஒட்டன்காடு வெட்டி பகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம் என மூன்று வாக்கு வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு தாமதமானது.
விக்கிரவாண்டியில் மதியம் 1 மணி நிலவரப்படி, ஆண்கள் 59,136 பெண்கள் 61,625, மாற்று பாலினத்தவர் 1 என மொத்தம் 1,20,762 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்குசதவிகிதம் 50.95 சதவிகிதமாக உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரை சுங்கச்சாவடி முற்றுகை: ஆர்.பி.உதயகுமார் கைது…. எடப்பாடி கண்டனம்!