விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 29.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 10) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலேயே பொதுமக்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவின் போது, விக்கிரவாண்டி அருகே கொசப்பாளையம் கிராமத்தில் வாக்குச்சாவடியில் நின்றிருந்த கனிமொழி என்ற பெண்ணை அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்தினார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து ஏழுமலையை கைது செய்தனர்.
இந்தநிலையில், காலை 11 மணி நேர நிலவரப்படி, விக்கிரவாண்டி தொகுதியில் ஆண்கள் 36,782 பெண்கள் 34,261 மாற்று பாலினத்தவர் 1 என மொத்தம் 71,044 பேர் வாக்களித்துள்ளனர். 29.97 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாமீன் வழக்கில் இழுத்தடிப்பது ஏன்? உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு காட்டம்!
Share market: பங்குச்சந்தை சரிவு… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?