விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

அரசியல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு ஜூலை 10 இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், ஜூலை 8-ஆம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,16,962, பெண்கள் 1,20,040, மூன்றாம் பாலினத்தவர் 29 என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.

276 வாக்குப்பதிவு மையங்களில் 1,355 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

களையிழந்து காணப்படும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்: காரணம் என்ன?

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்குப்பதிவு முதல் அதிமுக ஆலோசனை வரை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *