Vikravandi by-election: Anniyur Siva files nomination

விக்கிரவாண்டி: அமைச்சர்கள் புடைசூழ அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்!

அரசியல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா இன்று (ஜூன் 19) வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வேட்பாளர்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. வேட்புமனுக்கள் மீது ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் எனவும், வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூன் 26ஆம் தேதி கடைசி நாளாகவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அன்னியூர் சிவா

திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் இன்று (ஜூன் 19) காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

1 நபர் மற்றும் கோவில் படமாக இருக்கக்கூடும்

இன்று காலை விக்கிரவாண்டி செட்டீஸ்வரன் கோவில் தெருவில் தேர்தல் பணிமனையை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், சி.வெ.கணேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் எம்.பி. ஜெகத்ரட்சகன் திறந்துவைத்தார். அதன் பின்  அங்கிருந்து ஊர்வலமாக சென்று அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் செய்தார்.

அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் செய்தபோது அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கெளதம சிகாமணி, விழுப்புரம் விசிக எம்பி ரவிக்குமார், மற்றும் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கடந்த 14ஆம் தேதி முதல் இதுவரை 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.அன்புமணியும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

அதேபோல், நாதக வேட்பாளர் அபிநயா நாளை (ஜூன் 20) வேட்புமனு தாக்கல் செய்வார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பாஜக மாநில துணைத்தலைவர் மீது புகார்!

ஏறி இறங்கும் தங்கம் விலை : இன்று எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0