விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக தேர்தல் பணிக்குழு ரெடி!

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழுவை திமுக இன்று (ஜூன் 12) அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா நேற்று (ஜூன் 11) அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்னியூர் சிவா திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து இன்று (ஜூன் 12) வாழ்த்து பெற்றார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் பணிகளை கவனித்திட தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 14-ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழு

பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளர்

ஜெகத்ரட்சகன், கொள்கை பரப்பு செயலாளர்

காணை மத்திய ஒன்றியம் – கே.என்.நேரு, முதன்மை செயலாளர்

விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் – பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,

விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் – வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

காணை வடக்கு ஒன்றியம் – உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

கோலியனூர் மேற்கு ஒன்றியம் – சிறு,குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம் – போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

விக்கிரவாண்டி பேரூர் –  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்

காணை தெற்கு ஒன்றியம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டாக்டர் லெட்சுமணன் எம்.எல்.ஏ

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல்! முந்தும் திமுக… அன்புமணிக்கு அண்ணாமலையின் மெசேஜ்!

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனையா? செல்வப்பெருந்தகை விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share