விக்ரமின் ‘தங்கலான்’ படத்தால், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை, பெரும் பொருட்செலவில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘தங்கலான்’ படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே, இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
மறுபுறம் சூர்யா ஆறு வேடங்களில் நடித்து வரும் படம் கங்குவா. இதில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தால் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருப்பதாக, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘தங்கலான்’ படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதனால் ‘கங்குவா’ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளது.
இடையில் மே மாதம் அஜித்தின் ‘விடாமுயற்சி’, ஜூன் மாதம் விஜயின் ‘GOAT’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. பட்ஜெட் மிக அதிகம் என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், ‘கங்குவா’ படக்குழு ஆகஸ்ட் மாதத்தைத் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று சக்கர வாகனத்தில் இருந்து டூ வீலர் : ஹீரோவின் புதிய அவதார் இது!