சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் 2 திரைப்படம் நாளை (மார்ச் 27) உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. vikram veera dheera sooran release halt
இப்படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவில் விக்ரமின் முந்தைய படங்களுக்கு இல்லாத வகையில், வீர தீர சூரன் 2 பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக படம் நாளை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்படத்திற்கு மும்பையை சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனமும் முதலீடு செய்திருக்கிறது. இதன் காரணமாக படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பு நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு எழுதி கொடுத்துள்ளது.
எனினும் ஒப்பந்தத்தில் உள்ளபடி இன்னும் படம் ஓடிடி உரிமை விற்கப்படவில்லை. அதற்குள்ளாகவே படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து, ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. ரிலீஸ் தேதியை அறிவித்ததால், படத்தை ஓடிடிக்கு விற்க முடியவில்லை.
இதனால் முதலீட்டில் 50 சதவீதம் நஷ்டம் அடைந்ததாக B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தெரிவித்து இருக்கிறது. ஆனால் B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்ற நீதிபதி மன்பிரீத் சிங் அரோரா ஒத்தி வைத்தார்.
மேலும், படத்தை நாளை காலை 10.30 மணி வரை படத்தை வெளியிடக்கூடாது என இடைக்கால உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணிக்கு வீர தீர சூரன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி திரையிட இருந்த நிலையில், பகல் 12 மணிக்கே ரிலீசாகும் என தெரியவந்துள்ளது.