விஜய்யின் ’ஜனநாயகன்’ வழக்கு- இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

Published On:

| By Mathi

Jananayagan Verdict

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரும் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடத்தி வரும் விஜய், நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படம் இன்று (ஜனவரி 9) ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால், இத்திரைப்படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. ஜனநாயகன் திரைப்படத்தை டிசம்பர் 19-ந் தேதி பார்த்த தணிக்கை குழு, சில திருத்தங்களை செய்ய கூறியது. இதனடிப்படையில் திருத்தங்கள் செய்யப்பட்டு தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஜனநாயகன் திரைப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் புகார் கொடுத்ததால், மறு தணிக்கைக்காக மும்பைக்கு இத்திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா இன்று தீர்ப்பளிக்கப்படும் என வழக்கை ஒத்திவைத்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை.

இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share