GOAT பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்… என்ன ஸ்பெஷல்னு பாருங்க!

Published On:

| By Manjula

விஜய் நடிக்கும் ‘GOAT’ திரைப்படத்தைப் பற்றி, நாளுக்குநாள் புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

தளபதி விஜய் சீக்கிரமே முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகும் இரண்டு படங்களாக ‘GOAT’ மற்றும் தளபதி 69 படங்கள் அமைந்துள்ளன.

‘GOAT’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த வருடம் மே மாதம் ‘தளபதி 68’ என்று அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்பொழுது வேகமாக நடந்து வருகிறது.

தளபதி விஜய் இரண்டு வேடங்களில் மிரட்ட இருக்கிறார். இதில் அவருடன் ஜெயராம், மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி போன்ற பலர் நடிக்கின்றனர்.

தல அஜித்திற்கு ‘மங்காத்தா’ என்ற மிகப் பெரிய ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு அதேபோல, தளபதிக்கும் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

‘GOAT’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் லேட்டஸ்ட் தகவலாக GOAT திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (ஏப்ரல் 14) ரிலீஸ் ஆகிறது.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் தளபதி விஜய் இந்த பாடலைப் பாடி இருக்கிறார். எப்போதுமே விஜய் படத்தின் முதல் பாடல் மரண மாஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகளால் தளபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் விளம்பரங்கள்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

சாமி Vs சிங்கம் – ஹரியின் யுனிவர்ஸ்.. செம ஐடியா..!

ராமநாதபுரத்தில் விமான நிலையம்: ஓபிஎஸ் வாக்குறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share