வைஃபை ஆன் செய்ததும், ’ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வானிலையா?’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது.
என்னய்யா ரைமிங்குடன் ஆரம்பிக்கிறீரு?
டைமிங்காதானே தகவல் சொல்ல முடியும்.. திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு அடுத்தடுத்து வேட்டு வைச்சுகிட்டே இருக்கிற பிரவீன் சக்கரவர்த்தி பத்திதான் ஒரு தகவல் கிடைச்சிருக்குய்யா..
ஓஹோ… ‘சலங்கை கட்டிவிட்ட’ மாதிரி ஆடுகிற பிரவீன் சக்கரவர்த்தியா?
அவரேதான்.. சிஎம் ஸ்டாலினை காங்கிரஸின் ஐவர் குழு சந்திச்ச பேசுனப்ப, விஜய்யை சந்திச்சு பரபரப்பை கிளப்பினவரு பிரவீன் சக்கரவர்த்தி.. திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கிற மாதிரி செயல்படுற பிரவீன் மேல டெல்லி காங்கிரஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலைன்னு திமுக அப்செட்டில் இருக்கு..
இது போதாதுன்னு இப்ப, ஓபனாகவே சோசியல் மீடியாவில் இந்தியாவிலேயே கடன்கார மாநிலமே தமிழ்நாடுதான்னு திமுக அரசை பகிரங்கமா அட்டாக் செஞ்சிருக்காரு பிரவீன் சக்கரவர்த்தி.. இப்ப இந்த விவகாரம்தான் ஹைலைட்..
பிரவீன் சக்கரவர்த்திக்கு யாரும் பதில் சொல்லலையா?
பிரவீன் சக்கரவர்த்தியின் ட்வீட்டுக்கு திமுக மாஜி எம்பி எம்.எம். அப்துல்லா, பச்சை புள்ளைக்கு கிளாஸ் எடுக்கிற மாதிரி ஒரு பதில் கொடுத்திருந்தாரு.. அதுக்கு அப்புறமா யாருமே எதிர்பார்க்காத கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தியை விளாசி இருந்தாரு.. காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்பி சசிகாந்த் செந்தில், சீனியர் லீடர் கோபண்ணான்னு பிரவீனுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க..
கடைசியாக செல்வப் பெருந்தகை இன்னைக்கு பிரவீனுக்கு எதிரா சரவெடியா வெடிச்சுட்டாரு.. பிரவீன் மேல நடவடிக்கை எடுக்க டெல்லிக்கு புகார் அனுப்பி இருக்கேன்.. ஆர்.எஸ்.எஸ். பாஜக சதிக்கு இரையாகுற தற்குறின்னும் திட்டிவிட்டிருக்காரு..
இதுல இன்னொரு சுவாரசிய சம்பவமும் இருக்கு.. மலேசியாவுல விஜய்யின் ஜனநாயகன் ஆடியோ ரிலீஸ் நடந்துச்சு இல்லையா… இதுக்கு பலவகையான பாஸ் கொடுத்தாங்க..
சினிமா பங்ஷனில முதல் ரோவுல படத்தோட நாயகன், நாயகி, தயாரிப்பாளர், இசையமைப்பாளர்.. ஸ்பான்சர்ஸ் அவங்க குடும்பத்தினருக்கு இடம் கொடுப்பாங்க..
2-வது ரோ MIP சீட்ஸ்ன்னு கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி கொண்டு வந்தாங்க.. Most Important Persons-ன்னு சொல்ற அந்த ரோவுல முக்கிய பிரமுகர்களை உட்கார வைப்பாங்க
அப்புறமாத்தான் VIP-1, VIP 2ன்னு பாஸ் எல்லாம்..
மலேசியா கோலாலம்பூரில் நடந்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்சுக்கும் இதே மாதிரிதான் சீட் அரேஞ்ச்மெண்ட்ஸ் இருந்துச்சு.. ஒரு டிக்கெட் விலை அதிகபட்சமா நம்ம இந்திய மதிப்பில ரூ.7,000 வரைக்கும் வித்தாங்க..
விஜய் தங்கி இருந்தது Shangri-la-ன்னு நட்சத்திர ஹோட்டலில்தான்.. இதுல 22-வது மாடியில்தான் கபாலி படத்துக்காக ரஜினிகாந்துக்கும் ரூம் போட்டிருந்தாங்க..
இதுல என்ன விஷயம்னா, விஜய் மலேசியாவுல லேண்ட் ஆன உடனே, கால் செய்த காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பிரண்ட்ஸ் 4 பேருக்கு, ஆடியோ லாஞ்ச் பங்ஷனுக்கு பாஸ் கேட்டிருக்காரு..
விஜய் தரப்பு உடனே, 4 MIP பாஸ்களை காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன நண்பர்களுக்கு அவங்க தங்கி இருந்த ஹோட்டலுக்கே நேரில போய் கொடுத்து ‘மகிழ்விச்சிருக்காங்க’ன்னும் சொல்றாங்கய்யா என்றபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.
