Ghilli: ரீ-ரிலீஸிலும் சாதனை… 3 நாட்களில் இத்தனை கோடியா?

Published On:

| By Manjula

விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவான கில்லி கடந்த 2௦-ம் தேதி, 2௦ ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் இந்தாண்டு இதுவரை எதுவும் பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், ரீ-ரிலீஸ் படங்களே திரையரங்குகளின் காப்பானாக மாறியுள்ளன.

அந்தவகையில் கில்லி திரைப்படம் வெளியான 3 நாட்களிலேயே, உலகம் முழுவதும் ரூபாய் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். விசிடி, டிவி, ஓடிடி என இந்த படத்தை கடந்த 2௦ ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இன்றும் முக்கிய தினங்களில் சன் டிவி இப்படத்தை ஒளிபரப்பி வருகிறது. ஆனாலும் திரையரங்குகளில் கூட்டம் குவிந்து வருவது, அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தரணியின் வேகமான திரைக்கதை மட்டுமின்றி, வித்யாசாகரின் தெறிக்க விடும் பாடல்களும் இதற்கு முக்கிய காரணமாகும்.

அதனால் தான் இன்று பார்த்தாலும் இப்படம் பிரெஷ் ஆக இருக்கிறது. இதனால் தான் 2கே கிட்ஸ்கள் தொடங்கி முதியவர்கள் வரை இப்படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறையும் தொடங்கி விட்டதால், இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூலுக்கு குறைவிருக்காது என்றே தோன்றுகிறது.

விஜய்யின் கேரியரில் அவருக்கு 5௦ கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் படம் கில்லி. தற்போது இப்படத்திற்கு குவியும் ரசிகர்களைப் பார்த்தால், மீண்டும் அந்த வசூலை படம் எட்டிவிடும் போலத் தெரிகிறது.

கில்லி மீண்டும் ஒரு மைல்கல்லினை எட்டுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெறுப்புப் பேச்சு : மோடி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு கோரும் திருமா

14 வருடங்களுக்கு பிறகு… சிம்புவிற்கு ஜோடியான திரிஷா..!

சாண்டல்வுட்டில் களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… ஹீரோ யாருன்னு பாருங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share