தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும் கலப்பை இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான பி.டி.செல்வகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
விஜய்யின் மேலாளராக இருந்த பி.டி.செல்வகுமார், ”புலி” திரைப்படத்தின் தயாரிப்பாளர். விஜய் நடித்த போக்கிரி உள்ளிட்ட படங்களுக்கு பி.ஆர்.ஓவாகவும் பணிபுரிந்தார். பின்னர் விஜய்யிடம் இருந்து விலகி கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார் பி.டி.செல்வகுமார்.
இந்நிலையில் தமது கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருடன் பி.டி.செல்வகுமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிசம்பர் 11) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
