தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் விஜயமங்கலம் டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று ஈரோடு விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 18) கலந்து கொள்ள உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை விஜய் கோவை வந்தார். பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் விஜயமங்கலத்திற்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் தளபதி.. தளபதி என கோஷமிட்டனர். தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு காரில் ஏறி மாநாடு நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு சென்ற விஜயமங்கலம் டோல்கேட்டில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணிக்கிறது.
டோல்கேட் சுற்றி ஏராளமானோர் திரண்டதால் போலீசார் பொதுமக்களை ஓரமாக நிற்க அறிவுறுத்தி வருகின்றனர்.
