விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்: ராகுல்காந்தி

Published On:

| By christopher

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி  தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில்‌  சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரையுலகினரும் அவர் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Image

மேலும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிக கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகுந்த கவலை அடைந்தேன்.

அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் இணைந்து அவர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு எனது அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா 

டிஎன்பிஎஸ்சி செயலாளர் திடீர் மாற்றம்: தேர்வர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் தயாரிக்கும் முதல் படம் ‘Fight Club’!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share