என்ன பாத்தா எப்படி இருக்கு?: சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வீடியோ!

Published On:

| By Kavi

சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி இன்று (பிப்ரவரி 27) புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Vijayalakshmi video against Seeman

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. 

சிறிது நேரத்தில் அந்த சம்மன் கிழித்து எறியப்பட்டதும், சீமான் வீட்டு டிரைவர் மற்றும் செக்யூரிட்டி கைது செய்யப்பட்டிருப்பதும் நாம் தமிழர் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 27) கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “திமுகவினர்தான் விஜயலட்சுமியை அழைத்து வருகின்றனர். என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் விஜயலட்சுமி அழைத்து வந்து விடுவார்கள். 

அந்த அம்மாவை அழைத்து வந்து உட்கார வையுங்கள். நானும் வருகிறேன். அதன் பிறகு விசாரியுங்கள்” என்று கூறியிருந்தார். 

இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில், “இன்னிக்கு மீண்டும் பிரஸ் மீட்ல விஜயலட்சுமிய திமுக கூட்டிட்டு வந்துருக்குனு சீமான் சொல்லிருக்காரு. சீமான் அவர்களே முதல்ல விஜயலட்சுமி யாருனே தெரியாதுனு சொன்னிங்க. என்னை காங்கிரஸ் கூட்டிட்டு வந்துச்சுனு சொன்னிங்க.

உங்க மேல கேஸ் குடுத்த போது பாரதிய ஜனதா கூட்டிட்டு வந்துச்சுனு சொன்னிங்க.

2023ல  மதுர செல்வத்தை வச்சி என்கிட்ட பேச்சுவார்த்தைக்கு வந்தீங்க. 50 ஆயிரம் ரூபா மாசம் மாசம் கொடுத்திடுறேன். என்ன பத்தி எங்கேயும் பேசாதீங்கனு சொன்னீங்க.

 மாசம் மாசம் 50 ஆயிரம் ரூபா போட்டீங்க. என்கிட்ட வீடியோலாம்  வாங்குனீங்க.

அப்புறம் மதுர செல்வம்,   ‘உங்க வீட்டுக்காரர்கிட்ட பேசுறதுக்கு யார்கிட்டக்கா கேட்கணும்னு’ வாக்குமூலம் கொடுத்தார்.

உங்க பொன்னான வாயால தான் என்ன பொண்டாட்டி… பொண்டாட்டினு கூப்டிங்க.

அந்த வீடியோவலாம் காவல்துறைகிட்ட கொடுத்து, அதை காவல்துறை நீதிமன்றத்துல கொடுத்து… அதையெல்லாம் பாத்துதான் விஜயலட்சுமி உங்கள் முதல் மனைவியானு கேட்ருக்காங்க.

இப்போ என்னனா, அந்த பொம்பளய நேர்ல வர சொல்லுங்கனு சொல்றீங்க.

நான் இங்க தான் இருக்கேன் சீமான். நேர்ல வாங்க உங்கள பாத்து, என்ன பாத்தா எப்படி டா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன். 2 நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள அனுப்பிட்டு, இப்போ பிரெஸ் மீட்ல என்னைய பத்தி பேசிருக்கீங்க. நா அப்படி, இப்படி னு பேசிருக்கீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னலாம் பன்னபோகுது பாருங்க” என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். Vijayalakshmi video against Seeman

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share