ஆறு மாதம் தான் பழகினேனா? – சீமானுக்கு விஜயலட்சுமி பதில்!

Published On:

| By Selvam

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை 12 வாரங்களுக்குள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Vijayalakshmi slashes Seeman sexual

இதனையடுத்து சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். நேற்று (பிப்ரவரி 28) இரவு காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம், 1.30 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “விஜயலட்சுமியுடன் ஆறு மாதங்கள் மட்டுமே பழகினேன். அவர் என்னுடன் விரும்பி தான் உறவு வைத்துக்கொண்டார். பின்னர் பிடிக்கவில்லை என்று பிரிந்து போய்விட்டார். எனக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. இப்போது என் மீது குற்றம்சாட்டுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சீமானுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “அநாகரிகமாக பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களை விட கேவலமாக எனக்கு பேச தெரியும். 2008-ஆம் ஆண்டிலிருந்து வெறும் ஆறு மாதம் தான் உங்களுடன் பழகினேனா? பின்னர் ஏன் 2011-ஆம் ஆண்டு கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தேன்?

நீங்கள் செய்த டார்ச்சரை என்னால் தாங்க முடியவில்லை. மதுரை செல்வத்தை நீங்கள் ஏன் காப்பாற்ற வேண்டும்? என்னிடம் இருந்து வீடியோவை வாங்கியது ஏன்? சும்மா டிராமா போட வேண்டாம்.

விஜயலட்சுமி என்றால் யார் என்றே தெரியாது என்று சொன்னீர்கள். திமுக கொண்டு வந்த ஆள் என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைக்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 50 ஆயிரம் கொடுத்தேன் என்று சொல்கிறீர்கள். உங்களுடன் வாழ்ந்தது எனக்கு தான் கேவலம்” என்று தெரிவித்துள்ளார். Vijayalakshmi slashes Seeman sexual

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share