விஜயகாந்த் உடல் அடக்கம் : சுதீஷ் தகவல்!

Published On:

| By Kavi

மறைந்த விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அவரது மைத்துனர்  சுதீஷ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த இன்று (டிசம்பர் 28) காலை காலமானார்.

அவரது உடல் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. விஜயகாந்த்தின் தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் இன்று (டிசம்பர் 28) காலை 6.10 மணிக்கு காலமானார் என்றும் அவரது உடல் நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் சகோதரர் சுதீஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“சிறந்த மனிதநேயவாதி விஜயகாந்த்”: ஆளுநர் ஆர்.என் ரவி

“சிறந்த மனிதநேயவாதி விஜயகாந்த்”: ஆளுநர் ஆர்.என் ரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share