அனுமதி மறுப்பு… தடையை மீறி விஜயகாந்த் நினைவு தின பேரணி!

Published On:

| By Selvam

விஜயகாந்த் நினைவு தின அமைதிப் பேரணிக்கு காவல்துறை இன்று (டிசம்பர் 28) அனுமதி மறுத்திருந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் தடையை மீறி பேரணி நடத்தினர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.

விஜயகாந்த் நினைவு தினத்தை ஒட்டி கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் முதல் விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், பேரணி நடத்தினால் போக்குவரத்து நெரிசல் எற்படும் என்று காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இந்த பேரணிக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால், நேற்று (டிசம்பர் 27) மாலை தான் பேரணிக்கு அனுமதி மறுப்பு தொடர்பாக தகவலை காவல்துறை தெரிவித்ததாகவும் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

இதனையடுத்து தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனையடுத்து காவல்துறை தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பேரணி நடத்தினர். பேரணியின் போது பிரேமலதா தனது கையில் ஜோதி ஏந்தி வந்தார். பேரணி முடிந்ததும் நினைவிடத்தில் ஜோதி வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்த் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செல்வம்

மன்மோகன் சிங்கின் முதுகில் குத்திய மிடில் கிளாஸ் – ஆனந்த் சீனிவாசன் வேதனை பேட்டி!

விஜயகாந்த் நினைவு தின பேரணி… போலீஸ் அனுமதி மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share