‘கோட்’ படத்தின் ஷூட்டிங்கில் விஜய்…திக்குமுக்காடிய திருவனந்தபுரம்

Published On:

| By Selvam

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். புதிதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், இப்படத்திற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.

கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் நடைபெற உள்ளது.

தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது படம் வெளியாவதற்கு முந்தைய நாள் திரையரங்குகள் முன்பாக போஸ்டர், கட் அவுட் அமைத்து மேள தாளங்களுடன் திருவிழா போல விஜய் படத்தை கொண்டாடுவார்கள்.

இந்தநிலையில், படப்பிடிப்பிற்காக விஜய் இன்று திருவனந்தபுரத்திற்கு வருவதை முன்பே அறிந்த அவரது ரசிகர்கள், விமான நிலையத்தில் திரண்டனர். இதனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த விஜய், தனது காரில் இருந்தபடியே ரசிகர்களுக்கு கையசைத்தார். தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு காரில் விஜய் சென்றபோது, முன்னும் பின்னும் ஏராளமான ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் அவரை பின் தொடர்ந்தனர். ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய் காரின் கதவு, கண்ணாடி சேதமடைந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக காவலன் படத்தின் படப்பிடிப்பிற்காக, விஜய் கேரளா சென்றார். அதன்பிறகு இப்போது தான் விஜய் கேரளா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? – தமிழிசை பேட்டி!

பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த பாமக!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share