ரசிகன் முதல் ரஞ்சிதமே ரஞ்சிதமே வரை! 5 கோடி பேரை கிறங்கடித்த விஜய் குரல்!

Published On:

| By Jegadeesh

நடிப்பு , நடனம் , ஆக்‌ஷன் ,அதிரடி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நடிகர் விஜய்.

இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று டைட்டில் கார்ட் வந்த பாடல்கள் அனைத்துமே அன்று முதல் இன்று வரை ஹிட்டுதான்.

ADVERTISEMENT

இசையமைப்பாளர் தேவா இசையில் ரசிகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்ற பாடல் தான் விஜய் குரலில் வெளியான முதல் பாடல். கானா ஸ்டைலில் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவியது.

அதன்பின்னர் தேவா படத்தில் விஜய் பாடிய மூன்று பாடல்களில் அய்யய்யோ அலமேலு பாடல் மெகா ஹிட்டடித்தது.

ADVERTISEMENT
Vijay voice that made 5 crore people

அதுவரை சோலோவாக பாடிய விஜய்யின் குரலுக்கு விஷ்ணு படத்தின் மூலம் ஜோடி போட்டவர் விஜய்யின் அம்மா ஷோபா. இருவரும் சேர்ந்து பாடிய ’தொட்ட பேட்டா ரோட்டு மேல முட்ட பொரட்டா’ என்ற பாடல் ஆடாத கால்களையும் ஆட வைத்தது.

கானா, குத்து , ராக் பாடல்களை பாடிய விஜய் காதலுக்கு மரியாதை படத்தில் விழியில் விழிமோதி இதயக்கதவு திறந்ததே என்ற பாடல் மூலம் விஜய்யின் குரலை காதல் மரியாதை செய்தது.

ADVERTISEMENT

பத்ரி படத்தில் என்னோட லைலா வராலே மெய்லா என்று ரசிகர்களை ஜாலி மூடுக்கு அழைத்து சென்றார் நடிகர் விஜய். அன்று முதல் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற டைட்டில் கார்ட் இல்லாமலே இந்த பாடலை பாடியவர் விஜய் தான் என்பதை அவர் குரல் மூலம் அவருடை ரசிகர்கள் கண்டுகொண்டனர்.

சச்சின் திரைப்படத்தில் விஜய் பாடிய 25 வது பாடலான ’வாடி வாடி வாடி கைபடாத சீடி’ என்ற பாடல் இளசுகளை எகிறி ஆட வைத்தது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆண்ட்ரியாவுடன் விஜய் சேர்ந்து பாடிய பாடல் கூகுள் கூகுள் பண்ணிபாத்தேன் என்ற சாங் லேட்டஸ்ட் இளசுகளின் பேஸ்புக், ஸ்டேடஸ், பாய் பிரண்ட் , கேர்ள் பிரண்ட் என லேட்டஸ்ட் இளசுகளின் பேவரைட் சாங்.

ஜில்லா படத்தில் ’கண்டாங்கி கண்டாங்கி’ என்ற பாடல் மூலம் தன்னுடைய கணீர் குரலால் காதலை கரையவிட்டார் விஜய்.

பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர் அவர் ரசிகர்கள். வெறித்தனமாக பாடிக்கொண்டிருந்த நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் ’குட்டி ஸ்டோரி’ பாடல் மூலம் குட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

இதுவும் போதாது என்று பீஸ்ட் படத்தில் வெளியான ’ஜாலியோ ஜிம்கான’ பாடலை ஜாலியாக பாடி எல்லோரையும் ஜாலியாக்கினார்.

Vijay voice that made 5 crore people

பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா பாடலை தொடர்ந்து அடுத்து வெளிவர உள்ள வாரிசு படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற டூயட் பாடலை பாடி ரசிகர்களின் மனதை மயக்கியிருக்கிறார் விஜய்.

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலில் விஜய்யின் கணீர் குரலில் மானசியும் இணைந்து பாடிய இந்த பாடலை குதூகலத்துடன் கொண்டாடி தீர்க்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.

அறிமுக பாடல் , கான, குத்து , டூயட் , மெலடி என 28 ஆண்டுகளில் விஜய் பாடிய பாடல் தான் அவருடைய ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட் பாடல். அந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் மனைதை கரைத்த ரஞ்சிதமாக இணைந்திருக்கிறது வாரிசு படத்தின் பாடல். இந்த பாடல் தான் தற்போது இணையத்தில் 5 கோடி பார்வையாளர்களை தாண்டி ஹிட்டடித்து கொண்டிருக்கிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

60,000 பேருக்கு வேலை… தமிழ் நாட்டிற்கு வரும் மெகா ஐபோன் ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: வாழ்த்து கூறிய டிம் குக்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share