மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி : விஜய் புதிய அறிவிப்பு!

Published On:

| By christopher

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணியின் உயர்மட்ட நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் இன்று (மார்ச் 07) வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் கடந்த மாதம் அறிவித்தார். வரும் மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

எனினும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி வருகிறார். மேலும் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயிர்த்துள்ளார்.

அறிக்கையில் விவரமாக தலைவர் சொல்லியிருக்கிறார்” - புஸ்ஸி ஆனந்த் | nakkheeran

ADVERTISEMENT

கடந்த மாதம் 19ஆம் தேதி சென்னை பனையூரில் அக்கட்சியின் உறுப்பினர்‌ சேர்க்கை மற்றும்‌ உட்கட்சிக்‌ கட்டமைப்பு விரிவாக்கம்‌ தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

அப்போது, மகளிர்‌ தலைமையிலான உறுப்பினர்‌ சேர்க்கை அணி நிர்வாகிகள்‌ விரைவில்‌ அறிவிக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான மகளிர் தலைமையிலான மாநில நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், மாநில செயலாளராக சி.விஜயலட்சுமி, மாநில இணை செயலாளராக எஸ்.என் யாஸ்மின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலப் பொருளாளராக வி. சம்பத்குமார், மாநில துணை செயலாளர்களாக ஏ. விஜய்அன்பன் கல்லணை மற்றும் எம்.எல் பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Image

 

புதிய அணி விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்.

மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்.

இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

திமுக, அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு : அடுத்த கட்டம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share