சட்டப்பேரவை முகப்புடன் விஜய்- மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Published On:

| By Mathi

Vijay Meeting

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஏற்கனவே ஐவர் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர், விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்கிற குழப்பம் தொடர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

அதிமுக- பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற இந்த கூட்டணியின் முதலாவது பிரசார கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், “QR குறியீட்டுடன்கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்” என ஏற்கனவே தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கான வரவேற்பு பதாகையில், சட்டப்பேரவையின் முகப்புடன் விஜய் இருக்கும் படம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share