பிக் பாஸ் சீசன் 8 – ஐ தொகுத்து வழங்கவுள்ள புதிய தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதிக்கு அதைத் தயாரிக்கும் நிறுவனம் நிபந்தனை ஒன்றை விதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வந்த கமல்ஹாசன் இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதியை அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது.
இதுகுறித்து அடுத்தடுத்த புரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசன் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒரு நிபந்தனை வைத்ததாகத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறிய திரைப்படங்கள், பெரிய திரைப்படங்கள் என்கிற பாரபட்சமின்றி எல்லா படங்களையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் புரோமோட் செய்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஒரு குணத்தினால் பல்வேறு சிறு படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தங்கள் படங்களின் புரொமோஷனுக்காக விஜய் சேதுபதியை நாடும் வழக்கம் உண்டு.
இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை எந்த ஒரு படங்களின் புரொமோஷன்களையும் விஜய் சேதுபதி தனது x தளப் பக்கத்தில் பதிவிடக்கூடாது என பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அந்த நிகழ்ச்சி குறித்து முழு பார்வையும் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நிபந்தனைகள் அந்த நிறுவனத்தால் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள ‘பிக் பாஸ் – 8’ சீசனில் யார் யார் பங்குபெறவுள்ளனர், எந்த மாதிரியான புதிய விதிகள் அமைக்கப்படவுள்ளது என இந்த சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யூடியூப் கிரியேட்டர்ஸ்களுக்கு குட் நியூஸ்: இனிமேல் ஷார்ட்ஸ் வீடியோ 3 நிமிஷம்!
விஜய் குட்டி திராவிட மாடலை உருவாக்குகிறார்: தமிழிசை விமர்சனம்!
Comments are closed.