தொகுப்பாளினி டிடி ரன்பீர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்திருக்கிறார்.
முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் இயங்கி வருகிறார். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதுமட்டுமில்லாமல் கமல், விக்ரம், மாதவன், சூர்யா, நயன்தாரா எனப் பல முன்னணி நட்சத்திரங்களைப் பேட்டி எடுத்துள்ளார்.
தற்போது பாலிவுட்டிலும் டிடி தொகுப்பாளினியாக நுழைந்திருக்கிறார். கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர், வாணி கபூர் இணைந்து நடித்துள்ள படம் ‘ஷம்ஷேரா’. இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று மும்பையில் நடந்திருக்கிறது. இதை டிடி தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் கதாநாயகனான ரன்பீருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள டிடி, ‘ரன்பீர் ராஜ்கபூர் படத்தின் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கிய நிகழ்வு இன்று (நேற்று – ஜூலை 10) நடந்தது. பாலிவுட்டில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு திறமையான தமிழ் தொகுப்பாளர்களை இனி வரும் காலத்தில் அழைப்பார்கள் என நம்புகிறேன். அதற்கான ஒரு தொடக்கமாக இந்த நிகழ்வு அமையும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த படக்குழுவுக்கு நன்றி.
இந்த படத்துக்காக ரன்பீருடன் நான் இணைந்து உருவாக்கியவற்றை விரைவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்’ என மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். தமிழ் கடந்து அடுத்த நிலைக்குச் சென்றுள்ள டிடிக்கு ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
ஆதிரா