வெள்ளை வேட்டி கட்டுனதுக்கு ஒரு மதிப்பு கிடைச்சிருக்கு: ஜி.பி முத்து

Published On:

| By Jegadeesh

அக்டோபர் 9 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில், ஆண் போட்டியாளர்கள் 9 பேர், பெண் போட்டியாளர்கள் 10 பேர் மற்றும் ஒரு திருநங்கை 1 என மொத்தம் 20 போட்டியாளர்களை களம் இறக்கி உள்ளது பிக் பாஸ் சீசன் 6.

ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியின் மூலம் டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து அவருடைய எதார்த்தமான பேச்சுக்களால் பிக் பாஸ் ரசிகர்களை மட்டும் இன்றி பிக் பாஸ் போட்டியாளர்களையும் கவர்ந்து வருகிறார்.

இவரிடம் யாரெல்லாம் சண்டை போடுகிறார்களோ, அவர்களை தனது பாணியில் கலாய்த்து வருகிறார்.

முன்னதாக இந்த வாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி கேப்டனாகவும், ஆயிஷா, ஜி.பி.முத்து, தனலட்சுமி ஆகியோர் பாத்திரம் கழுவும் டீமிலும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 14 ) வெளியாகியுள்ள ப்ரோமோவின் படி கிளப் ஹவுஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட 2 போட்டியாளர்களை தேர்வு செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அதன்படி சாந்தி மற்றும் ஜி.பி முத்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் ஜிபி முத்துவை பற்றி சக போட்டியளர்கள் சொல்லும் போது யதார்த்தமா இருந்தீங்க…இந்த வீட்டை வீடா மட்டும் தான் பார்த்தீங்க…டாஸ்க்கா பார்க்கல.. என சொல்கிறார்கள்.

இதைக்கேட்ட ஜிபி முத்து, இந்த வெள்ளை வேட்டி கட்டுனதுக்கு ஒரு மதிப்பு கிடைச்சிருக்கு என கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தற்கொலை செய்துகொண்டவர் பழங்குடியினரே இல்லை: தமிழக அரசு!

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share