இளைஞர்களின் எழுச்சி நாயகன் மட்டுமின்றி எதிர்கால தமிழகத்தை ஆளும் சக்தியாக தமிழக மக்களால் உருவாக இருக்கிறார் விஜய் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று ( டிசம்பர் 6) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், தலைமை கழக ஆணையின்படி அம்பேத்கர் படத்திற்கு மலர் வளையம் வைத்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குறிப்பாக ஆணவம் என்பது உண்மையை மறைக்கும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது இளைஞர்களின் எழுச்சி நாயகனாக எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் விஜய். இன்று சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார், ஆகவே இளைஞர்களின் எழுச்சி நாயகன் மட்டுமின்றி எதிர்கால தமிழகத்தை ஆளும் சக்தியாக தமிழக மக்களால் உருவாக இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காத செங்கோட்டையன் கையெடுத்து கும்பிட்டுச் சென்றார்.
