விஜய் சேதுபதியை அசர வைத்த லைகா- பஞ்சாயத்துகளுக்கு பொறுப்பேற்ற ரெட் ஜெயன்ட்

Published On:

| By Kavi

கவனிக்க வைக்கும் நடிப்புத் திறமை மிக்க விஜய் சேதுபதி, இயக்குனர்களின் நடிகர் என புகழப்படுபவர். இருந்தாலும் பல வருடங்களாக குறிப்பிடத்தக்க ஒரு திடகாத்திரமான வெற்றியை தனித்து கொடுக்க முடியாத விஜய் சேதுபதிக்கு பெருந்தொகையை சம்பளமாக கொடுக்க முன் வந்திருக்கிறது லைகா நிறுவனம்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் தயாரிக்க போவதாக தேனாண்டாள் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையை எதிர்கொண்ட அந்த நிறுவனம் தயாரிப்பை தொடர முடியவில்லை.

இப்போது அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அதேசமயம், ஜெயம் ரவி உள்ளிட்டோரின் தேதிகள் உடனடி படப்பிடிப்பிற்கு ஒத்துவராததால் சங்கமித்ரா படத்துக்கு முன்பாக இன்னொரு படத்தை சுந்தர்.சி இயக்குவதெனவும் அந்தப் படத்தையும் லைகா நிறுவனமே தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் அரண்மனை வரிசைப் படங்களில் அடுத்ததாக அரண்மனை 4 படம் எடுக்கலாம் என சுந்தர் சி கூறிய ஆலோசனையை லைகா ஏற்றுக்கொண்டிருக்கிறது

அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் ஆகியோர் நாயகர்களாக நடிக்கவிருக்கிறார்கள்.

உடனடியாக இந்தப் படத்துக்குத் தேதிகள் கொடுத்துவிட்டாராம் விஜய்சேதுபதி. அதற்குக் காரணம் அவருக்குப் பேசப்பட்ட சம்பளம்.

ஆம், இந்தப் படத்தில் நடிக்க அவருக்கு 25 கோடி சம்பளமாம். இவ்வளவு சம்பளம் என்பதால் முன்பு ஒப்புக்கொண்ட படங்களைத் தள்ளி வைத்துவிட்டு இந்தப்படத்தில் முதலில் நடிக்கவிருக்கிறார் விஜய்சேதுபதி.

இதற்கான பேச்சுவார்த்தைகளை ரெட்ஜெயண்ட் நிறுவனம் நடத்தி முடித்ததால் படத்தையும் அந்நிறுவனமே வெளியிட உள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒப்புக் கொண்டு கால்ஷீட் கொடுக்கப்பட்ட படங்களின் தயாரிப்புகள் திட்டமிட்ட அடிப்படையில் நடக்காது.

இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வரக்கூடிய புகார்கள், பஞ்சாயத்துக்களை சமாளிக்கும் பொறுப்பை ரெட் ஜெயண்ட் ஏற்றுக் கொண்டுள்ளதாம்.

– அம்பலவாணன்

கல்லால் அடித்த அமைச்சர் நாசர்: ஸ்டாலின் விழா ஏற்பாட்டில் அதிர்ச்சி!

‘சர்ச்சை மருத்துவர்’ ஷர்மிகாவுக்கு புது உத்தரவு பிறப்பித்த எம்.சி.ஐ!

இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை: அண்ணாமலை சூசகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share