விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘மகாராஜா’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விஜய் சேதுபதி தனது 50வது படமாக ’மகாராஜா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து இன்றும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. மேலும் சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாகி 18 நாட்களை கடந்தபோது உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்தது. இதன்மூலம் ரூ.100 கோடி வசூலித்த தமிழ் நடிகர்களின் பட்டியலில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
வசூலில் மட்டுமின்றி நான் லீனியர் திரைக்கதையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை சிறப்பாக சித்தரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் வரும் 12-ம் தேதி (ஜூலை 12) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் மகாராஜா வெளியாக உள்ளதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி’ : உதயநிதி பேச்சை சுட்டிக்காட்டி அன்புமணி குற்றச்சாட்டு!