‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’: விஜய் சேதுபதியும் குடியுரிமையும்!

Published On:

| By Balaji

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து உருவாகிவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இசக்கி துரை தயாரித்து வரும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட் கிருஷ்ண இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் இயக்குநர் மகிழ்திருமேனி, மோகன்ராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தநிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜனவரி 15) வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஜனவரி 16-ஆம் தேதி வருகிறது. அதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. டைட்டிலில் இடம்பெற்ற யாதும் ஊரே என்ற வார்த்தைகளில் மக்கள் ஒன்றாகக் கூடிப் போராடுவது போன்றும், கேளிர் என்ற வார்த்தை முள் வேலியால் பிரிக்கப்பட்டது போன்றும் இருந்தது. எனவே சமூக பிரச்னை சார்ந்த மக்கள் போராட்டம் குறித்து இந்த திரைப்படம் பேச வருகிறதா? சந்தேகங்கங்கள் முன்வைக்கப்பட்டது.

அதனை உறுதிபடுத்தும் விதமாக இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. முஸ்லீம்கள் போன்ற உடையணிந்த பலர் தங்கள் உடைமைகளுடன் எங்கோ வெளியேறுவது போன்று அந்த போஸ்டர் உள்ளது. எனவே, சமூகத்தில் இன்று பல விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளான குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்தத் திரைப்படம் பேசப்போகிறதா என்னும் விதத்திலான யூகங்கள் வலுத்துள்ளன.

படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share