நடிகராக என்ட்ரி கொடுத்த விஜய்சேதுபதி மகன்: ‘பீனிக்ஸ் வீழான்’ டீசர் எப்படி?

Published On:

| By Selvam

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் டீசர் இன்று (ஜூன் 16) வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த விஜய் சேதுபதி மகன் சூர்யா,  ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் மூலம் ஹூரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படத்தை சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சூர்யா இப்படத்தில் கிக் பாக்ஸராக நடித்துள்ளார். டீசர் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ளது. பாக்ஸிங் காட்சிகளில் சூர்யா அதிரடி காட்டுகிறார். வரலெட்சுமி, அரசியல்வாதி கதாபாத்திரத்தில் சம்பத் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். பின்னணி இசை டீசருக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

முதல் படமே ஆக்‌ஷன் படமாக அமைந்துள்ளதால் ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் டீசரை விஜய் சேதுபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Phoenix - Official Teaser | Anl Arasu Master | Surya | Varalakshmi | Sampath | Devadharshini

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாடப்புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்!

பக்ரீத்… மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share