ADVERTISEMENT

விஜய் சேதுபதி – மிஷ்கின் பட டைட்டில் இதுவா?

Published On:

| By Selvam

vijay sethupathi in mysskin movie

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் ரொம்பவே பிஸியாக நடித்து வருகிறார். vijay sethupathi in mysskin movie

ADVERTISEMENT

ஜவான் படத்திற்கு பிறகு ஹிந்தியில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி குரங்கு பொம்மை படத்தை எடுத்த இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50 வது படமான மகாராஜா படத்தில் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 51வது படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஓர் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகிறதாக கூறப்படுகிறது.

ரயிலில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்திற்கு “ட்ரெயின்” என்று டைட்டில் வைக்க உள்ளாராம் மிஷ்கின். மேலும் இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி பிசாசு 2 படத்தில் ஒரு கேமியோ பாத்திரத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாக உள்ள ட்ரெயின் படத்தின் தகவல் வெளியானதும் இப்போதே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து விட்டது.

– கார்த்திக் ராஜா vijay sethupathi in mysskin movie

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!

சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை எட்டிய மீட்பு பணிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share