“மகாராஜா” : அசர வைக்கும் விஜய் சேதுபதி… டிரைலர் எப்படி?

Published On:

| By Selvam

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் வித்தார்த், பாரதிராஜா நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக  நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது படத்தை இயக்குநர் நிதிலன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி 50வது படத்திற்கு மகாராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பஷன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து மகாராஜா படத்தை தயாரித்து உள்ளது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முடிதிருத்தும் தொழிலாளியாக நடித்துள்ளார்.

படத்தின் டிரைலரில் “என் வீட்டு லக்ஷ்மி காணாம போய்டுச்சு” என்று விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். லக்ஷ்மி என்றால் என்ன? நகையா? பொருளா? பெண்ணா? என்று காவலர்கள் கேட்டும் அனைத்து கேள்விக்கும் “இல்ல இல்ல” என்று பதில் சொல்லி அனைவரையும் கடுப்பேத்துகிறார் விஜய்சேதுபதி. அதன்பிறகு டிரைலர் முழுக்கவே சுவாரசியமான காட்சிகளை நிரப்பி, சஸ்பென்ஸ் ஆகவே முடித்திருக்கின்றனர்.

டிரைலரின் ஒவ்வொரு பிரேம்மிலும் விஜய் சேதுபதி நடிப்பில் மிரட்டி உள்ளார். மகாராஜா டிரைலரை பார்க்கும் போதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

வரும் ஜூன் மாதம் மகாராஜா படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Maharaja – Trailer (Tamil) | Vijay Sethupathi |Anurag Kashyap | Mamta Mohandas | Nithilan Saminathan

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘மோடியின் வெறுப்பு பேச்சு பிளவுகளை ஏற்படுத்தும்’ – மன்மோகன்சிங் தாக்கு!

‘கருடன்’, ‘கல்கி’ அனிமேஷன் சீரிஸ்… இந்த வார தியேட்டர் ஓடிடி லிஸ்ட் இதோ!

கோவை: அதிகாலையில் கோழியை கவ்வி சென்ற சிறுத்தை!

விஜய் ஆண்டனி “மழை பிடிக்காத மனிதன்” டீசர் எப்படி..?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share