ADVERTISEMENT

பிக் பாஸால் மரியாதை இழக்கும் விஜய் சேதுபதி

Published On:

| By Minnambalam Desk

எல்லா தமிழ் சேனல்களிலும் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும். ஆனால் விஜய் டிவியிலும் ஜீ தமிழிலும் முழுக்க முழுக்க அவர்கள் வைத்ததுதான் சட்டம்.

ஜீ தமிழில் சரிகம பாடல் போட்டி நிகழ்ச்சியில் காலத்தை வென்ற பழைய பாடல்களை யாராவது பாடும்போது சீனிவாஸ் என்ற நிரந்தர நடுவர் எம்எஸ்வி என்று மட்டும் கொண்டாடுவார். கண்ணதாசன் பெயரைக் கூட சொல்ல மாட்டார். சிறப்பு விருந்தினராக வருபவர்கள் சொன்னால் கூட பேச்சை மாற்றி அதைத் தடுப்பார்.

ADVERTISEMENT

கண்ணதாசனின் காவிய வரிகள் கொண்ட பாடல்கள் பாடப்படும் கூட எம்எஸ்வி போட்டோவைப் போடுங்கப்பா.. எம் எஸ் வி போட்டோவைப் போடுங்கப்பா என்று ஸ்ப்ரிங் சேரில் உட்கார்ந்து இருப்பது போல எம்பி எம்பி குதிப்பார்.

அந்த நிகழ்ச்சியில் சீனிவாஸ், சுஜாதா சேச்சி இருவரும் எல்லா சீசன்களிலும் நிரந்தர நடுவர்கள். ஆனால் எஸ்பி சரண், சைந்தவி, போன்றவர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள்.

ADVERTISEMENT

அதே போலதான் விஜய் டிவியிலும். எல்லா பெரிய பொறுப்புகளிலும் மலையாளிகள்தான் இருப்பார்கள்.

அங்கே எல்லா வகையிலும் மலையாளிகளுக்கு பெரிய சலுகை உண்டு.

ADVERTISEMENT

அது பிக் பாசில் நேரடியாகத் தெரியும். மற்ற மொழி பிக்பாஸ்களில் அந்த மொழி ஆட்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழ் ஆட்கள் யாரையும் அழைத்தார்கள் என்றால் அவர்களை மற்ற போட்டியாளர்கள் எப்படி வேண்டுமானாலும் அசிங்கப்படுத்தலாம். அதற்கென்றே ஒரு நிலை வரை வைத்திருந்து பிறகு வெளியே தூக்கி எறிவார்கள்.

அப்படிதான் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதியை தமிழ்ப் பெண் என்பதற்காகவே இந்தி பிக் பாஸில் உள்ளே விட்டு செய்யாத தவறுகளுக்குக் கதற விட்டார்கள்.

ஆனால் தமிழ் பிக்பாஸில் மலையாள ஆதிக்கம் அதிகம். இங்கே தமிழ் பிக்பாஸில் வரும் மலையாள போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு பிரச்னைகள் வராமல் விஜய் டி வி யில் உள்ள மலையாளிகள் பார்த்துக் கொள்வார்கள்.

கமல்ஹாசனே அதை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் அவர் இருந்தவரை பிக் பாஸ் போட்டியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேச வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் யாராவது பேசினால் பிக் பாஸே கண்டிப்பார். இப்போது அதெல்லாம் இல்லை. ரொம்ப தைரியமாக மலையாளத்திலேயே சத்தமாகப் பேசுகிறார்கள்.

அது மட்டுமல்ல. இப்போது இந்த பிக் பாஸ் சீசனில் இருக்கும் மலையாளப் போட்டியாளர்கள் விஜய் சேதுபதியையே கதற விடுகிறார்கள்.

இந்த சீசனில் சினிமா, டிவி நடிகர் ப்ரஜின், அவரது மனைவியும் சீரியல் நடிகையுமான சான்ட்ரா, இவர்களோடு திவ்யா கணேஷ் என்று மூன்று மலையாளிகள் வைல்ட் கார்ட் ரவுண்டில் (இடையில் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்படுவது) உள்ளே போனார்கள் .

இவர்கள் மூவரும் மற்றவர்களை மரியாதை இன்றி நடத்துவது, மலையாள பாசத்தோடு ஒன்றாக இருப்பது என்று ஒரு குழுவாக இருந்து மற்றவர்களை மனிதாபிமானமும் நாகரீகமும் இன்றி நடத்துகின்றனர். இதற்கு பாருவும் ஒத்து ஊதுகிறார்.

இதில் பிரஜன் விஜய் சேதுபதியின் அந்தக் கால நண்பராம். அவர் விஜய்சேதுபதியை மதிப்பதில்லை. விஜய் சேதுபதியை கிண்டல் செய்கிறார். அதற்கு அவர் மனைவி சான்ட்ரா சந்தோஷமாக சிரிக்கிறார். பாரு கூட விஜய் சேதுபதியை மதிப்பதில்லை.

விஜய் சேதுபதி பேசிக் கொண்டு இருக்கும்போதே ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். யாரிடமும் கண்ட்ரோல் இல்லை. பிக்பாஸையும் விஜய் சேதுபதியையும் யாரும் மதிப்பதில்லை.

இப்படியே போனால் பிக் பாஸ் வீட்டில் ஒரு கொலை விழுந்தால் கூட ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

கமல்ஹாசன் பேச்சில் கோபம் அதிகம் தெரியாது. கண்ணிலும் செயலிலும் அதிகம் தெரியும்.

விஜய் சேதுபதி கோபமாக அதிகம் பேசுகிறார். ஆனால் அவரால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. கமல் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் பிரஜூனுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருப்பார்.

ஆனால் விஜய் சேதுபதியை இன்னும் அவர்கள் எவ்வளவு கேவலப்படுத்தினாலும் விஜய் சேதுபதியால் அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்க முடியாது. காரணம் பிரஜினும் அவர் மனைவி சாண்ட்ராவும் திவ்யா கணேஷும் மலையாளிகள்.

வார இறுதியில் பிக்பாஸ் நிகழ்சசி நடத்துபவர் உள்ளே மோசமாக நடந்து கொள்ளும் போட்டியாளர்களை கதற விடுவதுதான் சனி ஞாயிறு எபிசோட்.

ஆனால் கடந்த இரண்டு வாரமாக அடாவடி போட்டியாளர்களிடம் சிக்கி விஜய் சேதுபதிதான் கதறிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் இந்த பிக் பாஸால் அசிங்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share