விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் ட்ரெய்லர் அப்டேட்!

Published On:

| By Monisha

merry Christmas trailer update

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’.

மெரி கிறிஸ்துமஸ் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் Bilingual படமாக உருவாகியுள்ளது. ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை ராதிகா ஆப்தே இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். Ae Dil hai mushkil, Brahmastra போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ப்ரீத்தம், மெரி கிறிஸ்துமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிப்ஸ் ஃபிலிம் நிறுவனம் தயாரித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டது. அதன் பின் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை ( டிசம்பர் 20) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெரி கிறிஸ்துமஸ் படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட முடியாததால் படத்தின் ட்ரெய்லரையாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடுவோம் என்று படக்குழு முடிவெடுத்து விட்டது போல.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ஆளுநரின் வெள்ள ஆய்வு: டெல்லியில் ஸ்டாலின் டென்ஷன் ரியாக்‌ஷன்!

மோடியை சந்திக்கும் ஸ்டாலின்… தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் எவ்வளவு?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share