‘ஏஸ்’ படத்தில் விஜய் சேதுபதி மாஸா? கிளாஸா?

Published On:

| By Kavi

Ace Movie Trailer Released

‘எந்த கேரக்டரா இருந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்’ என்கிற மனப்பாங்கு, வளர்ந்து வருகிற நிலையில் இருக்கும் எல்லா நடிகர்களிடமும் இருக்கும். ஆனால், குறிப்பிட்ட அளவில் ‘மார்க்கெட் வேல்யூ’ உண்டானபிறகு, அந்த மனப்பாங்கைத் தக்க வைப்பது கடினம். காரணம், ‘மாஸ்’ ஆன கதைகளில், கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றபிறகு, அதே நிலையிலான திரையிருப்பையே ரசிகர்கள் எதிர்பார்ப்பதுதான். Ace Movie Trailer Released

வெகு சில நடிகர்கள் மட்டுமே அந்த ‘தடையை’ லெப்ட் ஹேண்டில் டீல் செய்வார்கள். ‘என்னால் எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும்’ என்கிற விஷயத்தைச் சில படங்களுக்கு ஒருமுறை ரசிகர்களுக்கு உணர்த்தியபடியே இருப்பார்கள். அதுவும் முடியாத பட்சத்தில் மாஸ், கிளாஸ் என எல்லா விதங்களிலும் நடிக்கலாம் என்பது போன்ற பாவனையையாவது வெளியுலகுக்குக் காண்பிப்பார்கள். நடிகராக முத்திரை பதித்து, நட்சத்திரமாக இருந்துவரும் விஜய் சேதுபதிக்கும் மேற்படி சிக்கல் பொருந்தும்.

அதனாலேயே, ’அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்’ என்பது போன்று அமைந்திருக்கிறது அவரது ‘ஏஸ்’ பட ட்ரெய்லர். வரும் 23ஆம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது. ‘ரிலீஸை மறந்துடாதீங்க மக்கா’ என்பது போன்று இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. Ace Movie Trailer Released

ட்ரெய்லர் வழியே இப்படத்தின் கதை பிடிபடாவிட்டாலும், சில விஷயங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. Ace Movie Trailer Released

ஒரு இளைஞர். கடந்த கால வாழ்க்கையின் அடையாளங்கள் இனி தன் மீது படரக்கூடாது என்ற எண்ணத்தோடு மலேசியா நாட்டில் போய் இறங்குகிறார்.

சென்ற இடத்தில் அவர் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. அவற்றில் அனேகம், பிறருக்கு உதவி செய்யும்பொருட்டு அவர் கையிலெடுத்துக் கொண்டவை. அந்த ‘பிறர்’ரில் கதையில் வரும் நாயகிகளும் அடக்கம் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. Ace Movie Trailer Released

ஆனால், அந்த நபருடன் சுற்றும் காமெடியன் தொடங்கி நாயகிகள், வில்லன்கள் என அனைவரது மனதிலும் சில கேள்விகளே இருக்கின்றன. ‘யார் நீ’, ‘எதற்காக நீ மலேசியா வந்திருக்கிறாய்’ என்பதே அந்தக் கேள்விகள். அதற்கு நாயகன் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்கிறது ‘ஏஸ்’ ட்ரெய்லர்.

அந்தக் கேள்விக்கான பதிலாக, ட்ரெய்லரில் விஜய் சேதுபதி சில பாவனைகளை வெளிப்படுத்துகிறார். அது அவரது ‘ட்ரேட்மார்க்’ ஸ்டைலில் இருக்கிறது.

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக்கை வைத்து ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை இயக்கிய ஆறுமுக குமார், இப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ். கையாண்டிருக்கிறார். ட்ரெய்லரிலேயே தனது இருப்பை நிரூபித்திருக்கிறார் சாம்.

ருக்மிணி வசந்த், திவ்யா, யோகிபாபு, பப்லு பிருத்விராஜ், ‘கேஜிஎஃப்’ அவினாஷ், முத்துகுமார், ராஜ்குமார் உடன் டெனிஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிஸில்லா எனச் சில மலேசிய திரை பிரபலங்களும் இதில் நடித்திருக்கின்றனர்.

ட்ரெய்லர் முடிவில், தாளில் வரைந்த ஒரு கேரிகேச்சரை வைத்துக்கொண்டு ‘இது என்னைய மாதிரியா இருக்குது’ என விஜய் சேதுபதி கேட்க, ‘சிவகார்த்திகேயன் மாதிரி இருக்கு’ என்கிறார் யோகிபாபு. Ace Movie Trailer Released

இது போன்ற விஷயங்கள் படத்தில் ஆங்காங்கே இருந்து, ட்ரெய்லரில் காட்டப்பட்டது போன்றே விறுவிறுப்பான ஆக்‌ஷன் காமெடி த்ரில்லர் ஆகத் திரையில் மலரும் பட்சத்தில் ‘ஏஸ்’ ரசிகர்கள் மனங்களை ‘அடுக்கிய சீட்டுக்கட்டாக’ மொத்தமாக அள்ளலாம்.

முக்கியமான விஷயம். இந்த ட்ரெய்லரில் விஜய் சேதுபதி மாஸா வர்றாரா, கிளாஸா வர்றாரா என்பதற்கு இயக்குனர் ஆறுமுக குமார் பதிலேதும் சொல்லவில்லை. நிச்சயமாக, படத்தில் அதற்குப் பதில் சொல்லியிருப்பார் என்று நம்பலாம். ஏனென்றால், அதனைத் தெளிவாகச் சொல்லிவிட்டாலே இப்படத்தின் வெற்றி பாதியளவு உறுதி செய்யப்பட்ட மாதிரி தான்..!

Ace - Trailer | Vijay Sethupathi, Rukmini | Justin Prabhakaran| Sam CS| Arumugakumar| Yogi Babu| 7CS
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share