”என் படம் ரிலீஸ் ஆனதே நிறைய பேருக்குத் தெரியல” : விஜய் சேதுபதி வேதனை!

Published On:

| By christopher

Vijay Sethupathi accept that low promotions of ACE

மகாராஜா என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் நடிப்பில் நேற்று (மே 23) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஏஸ்’. Vijay Sethupathi accept that low promotions of ACE

ஆறுமுக குமார் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் கன்னட நடிகை ருக்மணி வசந்த் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவருடன் யோகி பாபு, பிருத்விராஜ் சுகுமாரன். திவ்யாபிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஆறுமுக குமார் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை இன்று சந்தித்து பேசினர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “ஏஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனதே நிறைய பேருக்குத் தெரியவில்லை. அது எங்களுடைய தவறுதான். ஒரு சில நெருக்கடிகளால் படத்தை திடீரென வெளியிட வேண்டிய சூழல் வந்துவிட்டது. அது எல்லாத்தையும் இப்போது சொல்ல முடியாது. எனினும் மக்களிடம் இருந்து ஏஸ் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

ADVERTISEMENT

ஒரு படம் எடுத்தப்பிறகு அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் கமல், சிம்பு போன்ற பெரிய நடிகர்கள் நடித்த ‘தக் லப்’ படத்தை விளம்பரப்படுத்தவே 25 நாட்கள் தேவைப்படுகிறது.

ஆனால் நாங்கள் ஒருவாரத்திற்கு முன்னதாக தான் ப்ரோமோசன் பணிகளைத் தொடங்கினோம். எனினும் மக்களிடமிருந்து போதுமான வரவேற்பு படத்திற்கு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share